நகராட்சியில் சமத்துவபொங்கல் விழா

திருமங்கலம் நகராட்சியில் சமத்துவபொங்கல் விழா நடந்தது. நகர் மன்றத்தலைவர் ரம்யா முத்துக்குமார் மற்றும் நகராட்சி பெண் கவுன்சிலர்கள் பொங்கலிட்டனர்.
நகராட்சியில் சமத்துவபொங்கல் விழா
Published on

திருமங்கலம்

திருமங்கலம் நகராட்சி அலுவலகத்தில் சமத்துவபொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி நகர்மன்ற அலுவலகம் அலங்கரிக்கப்பட்டிருந்தது. முகப்பு வாசலில் அடுப்பு வைக்கப்பட்டு புதிய பானையில் பொங்கல் வைக்கப்பட்டது. நகர் மன்றத்தலைவர் ரம்யா முத்துக்குமார் மற்றும் நகராட்சி பெண் கவுன்சிலர்கள் பொங்கலிட்டனர். துணைத்தலைவர் ஆதவன்அதியமான், ஆணையாளர் டெரன்ஸ்லியோன் முன்னிலை வகித்தனர். கவுன்சிலர்கள், நகராட்சி ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது.

கவுன்சிலர்களுக்கு பொங்கல்பானை, கரும்பு உள்ளிட்டவைகளை நகர்மன்றத்தலைவர் ரம்யாமுத்துக்குமார், திருமங்கலம் தி.மு.க. நகரசெயலாளர் ஸ்ரீதர் வழங்கினர். சமத்துவ பொங்கல் திருவிழாவில் நகராட்சி கவுன்சிலர்கள் வீரக்குமார், பெல்ட்முருகன், சின்னசாமி, திருக்குமார், ரம்ஜான்பேகம், சங்கீதா, மங்களகவுரி, முத்துக்காமாட்சி, ராஜவேலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com