கட்டுமான தொழிலாளர்களுக்கு நிதியுதவி

நலவாரியத்தில் பதிவு செய்த கட்டுமான தொழிலாளர்களுக்கு நிதியுதவி வழங்கக்கோரி அறிவிப்பு வெளியானது.
நிதியுதவி
நிதியுதவி
Published on

மதுரை

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறையின்படி தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு பெற்ற சொந்தமாக வீடு இல்லாத கட்டுமான தொழிலாளர்களுக்கு சொந்தமாக வீட்டு மனை வைத்திருந்தால் அவர் களாகவே வீடு கட்டிக்கொள்ள நிதிஉதவி வழங்குவது அல்லது தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விடம் மேம்பாட்டு வாரியத்தால் ஏற்கனவே கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளை ஒதுக்கீடு பெற ரூ.4 லட்சம் நிதிஉதவி வழங்கப்படும்.

இந்தஉத்தரவில் சொந்த வீட்டுமனையில் கட்டுமான தொழிலாளர்கள் அவர்களாகவே வீடு கட்டிக் கொள்ளும் திட்டத்திற்கு விண்ணப்ப படிவம் L-ல் பூர்த்தி செய்து படிவத்தில் கோரப்பட்ட இணைப் புகளுடன் www.tnuwwb.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். 

அதே போன்று தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளின் ஒதுக்கீடு பெறும் திட்டத்திற்கு உரிய விண்ணப்ப படிவம் Mல் பூர்த்தி செய்துபதிவு பெற்ற கட்டுமான தொழிலாளியின் அடையாள அட்டை, ஆதார் நகல், குடும்ப அட்டைநகல், வங்கி கணக்கு புத்தகநகல், அசல் வருமானச்சான்று மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஆகியவற்றுடன் www.tnuwwb.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.

இத்திட்டத்தின்கீழ் பயனடையும் கட்டுமான தொழிலாளர்களுக்கோ அல்லது அவர்களது குடும்ப உறுப் பினர்களுக்கோ சொந்தமாக வேறு எங்கும் கான்கிரீட் வீடு இருக்கக்கூடாது. வேறு எந்த அரசு வீடு கட்டும் திட்டத்தின்கீழ் பயனடைந்து இருக்கக்கூடாது. 

ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருக்கவேண்டும். தேர்வு செய்யப்படும் கட்டுமான தொழிலாளிக்கு 300 சதுர அடியில் வீடுகட்டிக்கொள்ள அனுமதி வழங்கப்படும். வீட்டுமனைபட்டா தன் பெயரிலோ அல்லது குடும்ப உறுப்பினர்கள் பெயரில் கூட்டு பட்டாவாகவோ இருக்க வேண்டும். இத்திட் டத்தின் கீழ் பயன்பெற கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் ஆகி இருப்பதுடன் பதிவு தொடர்ந்து நடப்பில் இருக்க வேண்டும்.

மதுரை தொழிலாளர் இணை ஆணையர் மண்டலத்திற்கு உட்பட்ட மதுரை விருதுநகர் சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பதிவுபெற்ற கட்டுமான தொழிலாளர்கள் இத்திட்டத்தின்கீழ் விண்ணப் பித்து பயனடையலாம்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com