மாணவிகள் விடுதியில் கோட்டாட்சியர் ஆய்வு

மேலூரில் அடிப்படை வசதி இல்லாத மாணவிகள் விடுதியில் கோட்டாட்சியர் ஆய்வு செய்தார்.
மாணவிகள் விடுதி ஆய்வு.
மாணவிகள் விடுதி ஆய்வு.
Published on

மேலூர்

மேலூர் சொக்கம்பட்டியில் அரசு மாணவர் விடுதிகள் உள்ளது. இங்கு 36 மாணவிகள் வெளி மாவட்டம் மற்றும் வெளியூரிலிருந்து தங்கி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர். 

அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லாததும், உரிய பாதுகாப்பு இல்லாததும் குறித்து வருவாய் துறையினருக்கு புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்பேரில் மேலூர் வருவாய் கோட்டாட்சியர் பிர்தவுஸ் பாத்திமா ஆய்வு செய்து மாணவிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். மேலும் ஒரே அறையில் 36 மாணவிகளும் தங்கி இருப்பது குறித்தும், வசதிகள் இல்லாமல் மாணவிகள் அவருடைய உடைகள் மற்றும் உடமைகளை வைக்கக்கூடிய அறை பாழடைந்த நிலையில் உள்ளன.  

கழிப்பறைகள் பராமரிப்பின்றி உள்ளது. மாணவிகளுக்கு போதிய பாதுகாப்பு இன்றி உள்ளது. இந்த இல்லத்தின் பின்புறம் காம்பவுண்ட் சுவர் இடிந்த நிலையில் உள்ளது. ஆதி திராவிட நலத்துறையின் மூலமாக ஆதிதிராவிட மாணவிகளுக்கு உணவுக்கான உதவி தொகையும், பிற்படுத்தபட்ட நலத்துறையின் மூலமாக பிற்படுத்தப்பட்ட மாணவிகளுக்கும் உணவுக்கான உதவி தொகையும் மாதம்தோறும் இந்த இல்லத்திற்கு வழங்கப்பட்டு வருகிறது. 

ஆய்வை மேற்கொண்ட அவர் இதுகுறித்து விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாணவிகளிடம் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com