மின் கட்டண உயர்வுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு

குறைதீர்க்கும் கூட்டத்தில் மின் கட்டண உயர்வுக்கு பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. தமிழக அரசு மின் கட்டண உயர்வை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று ேகட்டுக்கொண்டனர்.
மின்வாரிய அதிகாரிகள் பொதுமக்களிடம் கருத்து கேட்டபோது எடுத்த படம். 
மின்வாரிய அதிகாரிகள் பொதுமக்களிடம் கருத்து கேட்டபோது எடுத்த படம். 
Published on

மதுரை

தமிழக அரசு மின்கட்டண உயர்வு தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறது. இதையொட்டி மாவட்டம் தோறும் குறைதீர்ப்பு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

மதுரை தல்லாகுளம் திருமண மண்டபத்தில் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் சார்பில் குறைகேட்பு கூட்டம் இன்று காலை நடந்தது. இதில் மின்வாரிய உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். அப்போது அவர்கள் 'மின் கட்டண உயர்வு தேவையற்றது. இதனால் நாங்கள் மின் கட்டணம் செலுத்த முடியாத நிலை ஏற்படும்.

எனவே தமிழக அரசு மின் கட்டண உயர்வை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று ேகட்டுக்கொண்டனர். மக்களின் கருத்தை அதிகாரிகள் பதிவு செய்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com