போலீசாருக்கு மோர், நன்னாரி குடிநீர் வழங்கல்

மதுரை மத்திய சிறையில் போலீசாருக்கு மோர், நன்னாரி குடிநீர் வழங்கப்பட்டது.போலீஸ் சூப்பிரண்டு பரசுராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
போலீசாருக்கு மோர், நன்னாரி குடிநீர் வழங்கல்
Published on

மதுரை

மதுரை மத்திய சிறையில் பணி புரியும் போலீசார் மற்றும் வழி காவலர்களின் நலனை கருத்தில் கொண்டு மோர் மற்றும் வெட்டிவேர், நன்னாரி கலந்த குளிர்பானம் வழங்க வேண்டும் என்று சிறைத்துறை டி.ஜி.பி. அமரேஷ் பூஜாரி உத்தரவிட்டார்.

இதையடுத்து மதுரை மத்திய சிறையில் காவலர்களுக்கு கோடைகால வெப்பத்தை தணிக்கும் வகையில் குளிர்பானம், மோர் ஆகியவை இன்று காலை முதல் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மதுரை சரக டி.ஐ.ஜி. பழனி, போலீஸ் சூப்பிரண்டு பரசுராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தமிழகத்தில் முதல் முறையாக மதுரை மத்திய சிறை காவலர்களுக்கு நீர், மோர், பழங்கள் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com