கண்டன ஆர்ப்பாட்டம்

வாடிப்பட்டியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாநிலத்தலைவர் செல்லக்கண்ணு தலைமை தாங்கினார்.
கண்டன ஆர்ப்பாட்டம்
Published on

வாடிப்பட்டி

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பஸ் நிலையம் முன்பு பூர்வீக மக்கள் விடுதலை கட்சி சார்பில் ராஜஸ்தான் மாநிலத்தில் பள்ளியில் தண்ணீர் குடித்ததற்கு தாழ்த்தப்பட்ட மாணவன்ஆசிரியரால் அடித்துக் கொல்லப்ப ட்டதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் இரங்கல் கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்திற்கு மாநிலத்தலைவர் செல்லக்கண்ணு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தங்கமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி வடக்கு மாவட்ட நிர்வாகி கணபதி, சி.பி.எம்.எல். மாவட்ட செயலாளர் ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் பழனிக்குமார் வரவேற்றார். இதில் ஆதி தமிழர் ஜனநாயக தொழிலாளர்கள் பொது நல சங்க துணை செயலாளர் மகாலட்சுமி, தலைவர் முத்துராணி, பொருளாளர் விமலா, ரஜினி மக்கள் மன்ற ஒன்றிய செயலாளர் பரமன், நகர செயலாளர் பட்டைசேகர், விடுதலை சிறுத்தைகள் ஒன்றிய துணைச் செயலாளர் யுவராஜ், பேரூர் துணைச் செயலாளர் ஆனந்த் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com