

மதுரை
மதுரை மிகப்பெரிய ஆன்மீக நகரமாக திகழ்கி றது. மதுரையில் பழமையான பல கோவில்கள் உள்ளன . அது மட்டுமின்றி முக்கிய சுற்றுலாத்தலங்களும் உள்ளன. ராமேசுவரம் ராமநாதசுவாமியை தரிசிக்க வரும் பல மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் மதுரைக்கு வருகை தந்து மீனாட்சி அம்மனை தரி சனம் செய்து விட்டு செல்கின்றனர்.
அது மட்டுமின்றி தென் மாவட்ட மக்கள் முக்கிய நகரங்களுக்குச் செல்ல மதுரை வந்து செல்கின்றனர். இதனால் மதுரை நகரம் 24 மணி நேரமும் சுறுசுறுப்பாக காணப்படுகிறது. மேலும் அதிகாலையில் சந்தைகளுக்கு செல்லும் வியாபாரிகள் கூட்டம் அதிகளவில் உள்ளது.
பல்வேறு பெருமைகள் வாய்ந்த மதுரையில் ஆதரவற்றோர் மற்றும் மன நோயாளிகள் நூற்றுக்கணக்கில் வசிக்கின்றனர். அவர்கள் நடைபாதை மற்றும் ரெயில் நிலையம், பஸ் நிலையம்,கோவில் உள்ளிட்ட இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.இதில் சிலர் நடை பாதைளிள் தங்கி நடந்து செல்வோர்களிடம் உதவி கள்கேட்கின்றனர்.தேவையான உணவு கிடைத்தாலும் அந்த இடத்தை விட்டு அவர்கள் செல்வதில்லை. சிலநேரம் கடை உரிமையாளர்கள் அவர்களை கண்டிக்கின்ற னர்.ஆனால் அதனைப் பொருட்படுத்தாமல் வாடிக்கையாக தங்கள் செயலை தொடர்கின்றனர்.
இதனைப்பார்க்கும் சமூக ஆர்வலர்கள் , மன நோயாளிகளை மீட்டு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். ஆதரவற்ற முதியவர்கள் மற்றும் நோயாளி களை மீட்டு காப்பகங்களில் வசிக்க செய்ய வேண்டும்.இப்படி பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதால் வெளியூரிலிருந்து வரும் பயணிகள் மன வேதனை அடைகின்றனர். எனவே இதற்கு தீர்வுகாண சம்பந்தப்பட்ட அலு வலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.
இதேபோல் உள்ளூர் நகர மக்களும் ஆதரவற்றவர்களை காப்பகங்களில் வைத்து பராமரிக்க வேண்டும். மனநோயாளிகளை மீட்டு அவர்களின் மறுவாழ்வுக்கு உதவி செய்ய வேண்டும்.ஆதரவற்றோர் மற்றும் மன நோயாளிகளுக்கு அரசு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.