தனியார் கல்லூரி காவலாளி சாவு

தனியார் கல்லூரி காவலாளி கார் மோதி பலியானார். ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விபத்தில் பலியான மாரியப்பன்.
விபத்தில் பலியான மாரியப்பன்.
Published on

திருமங்கலம்

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ஆஸ்டின்பட்டி போலீஸ் சரகம் தனக்கன்குளம் வெங்கல மூர்த்தி நகரைச் சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 55). இவரது மனைவி சரஸ்வதி .

மாரியப்பன் மதுரையில் உள்ள கல்லூரியில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று இரவு சைக்கிளில் சமயநல்லூர்-திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்

அப்போது பின்னால் வந்த கார் எதிர்பாராதவிதமாக சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மாரியப்பன் ரத்த வெள்ள த்தில் சம்பவ இடத்தி லேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்த தகவல் அறிந்த ஆஸ்டின்பட்டி போலீ சார் சம்பவ இடத் திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து சரஸ்வதி கொடுத்த புகாரின்பேரில் கார் டிரைவர் திண்டு க்கல் மாவட்டம் சின்னாள பட்டியை சேர்ந்த தினேஷ் பாபு மீது ஆஸ்டின் பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com