வாடிப்பட்டி பகுதியில் மின்தடை

வாடிப்பட்டி பகுதியில் மின்தடை வருகிற 14-ந்தேதி மின்தடை ஏற்படுகிறது.
மின்தடை
மின்தடை
Published on

மதுரை

வாடிப்பட்டி துணைமின் நிலையத்தில் உள்ள மில் பீடரில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக வருகிற 14ந் தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை தாதம்பட்டி, தாதப்பநாயக்கன்பட்டி, போடிநாயக்கன்பட்டி, ராமநாயக்கன்பட்டி, கள்ளர்மடம், நீரேத்தான், வல்லகணபதிநகர், ஆர்.வி.நகர், பொட்டுலுப்பட்டி,  ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும். 

வாடிப்பட்டி துணைமின் நிலையத்தில் உள்ள ராயபுரம் பீடர் மற்றும் விக்கிரமங்கலம் துணைமின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் வருகிற 15ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும். 

விக்கிரமங்கலம், காடுபட்டி, புதுப்பட்டி, கோவில்பட்டி, கீழபெருமாள்பட்டி, அய்யம்பட்டி, மேலப்பெருமாள்பட்டி, கிருஷ்ணாபுரம், மணல்பட்டி, அரசமரத்துப்பட்டி, பையத்தான், நரியம்பட்டி, பாண்டியன்நகர், கல்புளிச்சான்பட்டி, கொளத்துப்பட்டி, நடுமுதலைக்குளம், எழுவம்பட்டி, வடுகபட்டி, உடன்காட்டுப்பட்டி, கொடிக்குளம், ஜோதிமாணிக்கம் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும். 

மேற்கண்ட தகவலை சமயநல்லூர் மின்னியல் செயற்பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com