போலியோ சொட்டு மருந்து முகாம்

மதுரையில் நாளை மறுநாள் (27ந்தேதி) போலியோ சொட்டுமருந்து முகாம் நடைபெற உள்ளது.
போலியோ சொட்டுமருந்து முகாம்
போலியோ சொட்டுமருந்து முகாம்
Published on

மதுரை

போலியோவை ஒழிப் பதற்காக ஆண்டு தோறும் தீவிர போலியோ சொட்டுமருந்து முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாமில் 5வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. 

இந்த ஆண்டு வருகிற 27ந்தேதி (நாளை மறுநாள்) போலியோ சொட்டுமருந்து முகாம் நடக்கிறது.  மதுரை மாவட்டத்தில் 2,66,230 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம், துணைசுகாதார நிலையம், சத்துணவு மையங்களில் அமைக்கப்பட்டுள்ள  முகாம்களில் காலை 7மணி முதல் மாலை 5மணி வரை போலியோ சொட்டு  மருந்து வழங்கப்படுகிறது. 

இது தவிர நடமாடும் குழுக்கள் மூலமாகவும் பஸ் நிலையம், ரெயில் நிலையம், விமான நிலையம் ஆகிய இடங்களிலும் சிறப்பு முகாம்கள் அமைத்து சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. 

இந்த பணியைக் கண்காணிக்க பொது சுகாதாரத்துறை இயக்குநர் அலுவலகத்தில் இருந்து அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக 13மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட் டுள்ளனர். சுகாதாரத்துறை மூலமாக 11மேற்பார்வையாளர்களும், ஆரம்ப சுகாதார நிலைய அளவில் 200 மேற்பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

இந்த முகாமிற்கு தேவையான பொது சுகாதாரத் துறையைச் சார்ந்த வாக னங்கள் 44 மற்றும் பிற துறை வாகளங்கள் 73 ஈடுபடுத்தப்பட உள்ளன.

எனவே, இதற்குமுன் எந்தனை முறை போலியோ சொட்டு மருந்து போட்டி ருத்தாலும், இந்த முகாமினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

மேற்கண்ட தகவலை கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com