போக்சோ விசாரணை கைதி திடீர் சாவு

மதுரை மத்திய சிறையில் போக்சோ விசாரணை கைதி திடீரென இறந்தார். சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போக்சோ விசாரணை கைதி திடீர் சாவு
Published on

மதுரை

விருதுநகர மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள கொள்ளக் கொண் டான் நக்கனேரி தெற்கு தெருவை சேர்ந்தவர் தாசையா (வயது62). இவர் கடந்த 2019-ம் ஆண்டு போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் விசா ரணை கைதியாக அடைக்கப் பட்டிருந்தார்.

கடந்த சில மாதங்களாக தாசையாவுக்கு கிட்னி நோய் பாதிப்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதற்காக அவர் சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சம்பவத்தன்ற உடல்நிலை மோசமாகவே தாசையா சிறையில் மயங்கி விழுந் தார். உடனே அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.பின்னர் சிறை காவலர்கள் அவரை மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே தாசையா பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து சிறை அதிகாரி மகேஸ்வரி கரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தாசையாவின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com