பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி

மதுரை அருகே பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.வீடு, வீடாகச் சென்று குப்பைகளை தரம் பிரித்து வழங்கவும், பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கவும் கேட்டுக் கொண்டனர்.
பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி
Published on

அலங்காநல்லூர்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள வாவிடமருதூர் ஊராட்சியில் ''நம்ம ஊரு சூப்பரு'' மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து பொதுமக்கள் முன்னிலையில் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. ஊராட்சி மன்ற தலைவர் திருநாவுக்கரசர், யூனியன் அலுவலர் வடிவு, ஊராட்சி செயலாளர் ஸ்டாலின் முன்னிலையில் வீடு, வீடாகச் சென்று குப்பைகளை தரம் பிரித்து வழங்கவும், பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கவும் கேட்டுக் கொண்டனர். இது தொடர்பான விபரங்கள் எடுத்துரைக்கப்பட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com