பங்குனி பொங்கல் விழா

மதுரை சோழவந்தான் கோவிலில் பங்குனி பொங்கல் விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. மதுரை சோழவந்தான் கோவிலில் பங்குனி பொங்கல் விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
பங்குனி பொங்கல் விழா
Published on

சோழவந்தான்

சோழவந்தானில் நாடார் உறவின் முறைக்கு பாத்தியமான பத்திர காளியம்மன் கோவிலில் பங்குனி பொங்கல் விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. பூசாரி சண்முகராஜா வைகை ஆற்றில் இருந்து சக்தி கரகம் எடுத்து வந்தார். பக்தர்கள் பால்குடம், அக்னி சட்டி எடுத்து வந்து நேர்த்திக் கடனை செலுத்தினர். சந்தன அபிஷேகம், அம்மன் ரிஷப வாகனத்தில் வீதி உலா, முளைப்பாரி ஊர்வலமும் நடந்தது. இன்று மஞ்சள் நீராட்டு நிகழ்வும், அன்னதானமும் நடந்தது. விழாவையொட்டி தினமும் ஆன்மீக சொற்பொழிவுகள் நடந்தன.

இதற்கான ஏற்பாடுகளை தலைவர் கவுதமராஜா, செயலாளர் ஜெயராஜ், உதவி தலைவர் இளமாறன், துணைச் செயலாளர் அய்யப்பராஜா, பொருளாளர் செல்வகுமார் மற்றும் மகளிர், இளைஞர்கள் சங்கத்தினர் செய்திருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com