நெல் கொள்முதல் நிலையம் தொடக்கம்

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே நெல் கொள்முதல் நிலையம் தொடங்கப்பட்டுள்ளது.
பொம்மன்பட்டியில் நெல் கொள்முதல் நிலையம் தொடங்கப்பட்டது.
பொம்மன்பட்டியில் நெல் கொள்முதல் நிலையம் தொடங்கப்பட்டது.
Published on

சோழவந்நான்

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கருப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கணேசபுரம், அம்மாச்சியா புரம், பொம்மன்பட்டி, மேல்நாச்சிகுளம் ஆகியகிராமங்களில் சுமார் 600 ஏக்கருக்குமேல் பெரியாறு பாசன கால்வாய் மூலம் 2ம்போக குறுவைசாகுபடி நெல்பயிரிடப்பட்டது. தற்போது நெல்அறுவடை பணிகளை விவசாயிகள் தொடங்கி  உள்ளனர்.

இந்தநிலையில் கடந்த ஆண்டைபோல் பொம்மன்பட்டி கிராமத்தின் மையப்பகுதியில் தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் நெல் கொள்முதல் மையம் தொடங்க வேண்டும்என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

கடந்த 20 நாட்களுக்கு மேலாக இந்தப்பகுதி கிராமங்களில் அறுவடையான நெல்லை பொம்மன்பட்டி உலர் களத்தில் சுமார் 2ஆயிரம் மூடை நெல்லை குவியலாக திறந்த வெளியில் கொட்டி உள்ளநிலையில்.கடந்த மார்ச் 10ந்தேதி வரை விவசாயிகளிடம் இருந்து நெல்கொள்முதல் பணியை அரசு, வாணிப கழக அதிகாரிகள் தொடங்கவில்லை. வெயிலில் நெல்மணிகள் காய்ந்து ஈரப்பதமின்றி மாறிவருவதால் கடன் வாங்கி பயிரிட்ட விவசாயிகள் நஷ்டம் அடையும் சூழலுக்கு தள்ளப்பட்டனர். 

மேலும் நெல்கொள்முதல் மையம் செயல்பட காலதாமதம் செய்யப்படுவதால் பலநூறு ஏக்கரில் நெல் அறுவடையாகாமல் வயலிலேயே நெற்கதிர்கள் சாய்ந்து முளைப்பு தன்மையடைந்து வரும்நிலை ஏற்பட்டது.  இது குறித்து பொம்மன்பட்டி கிராம விவசாயிகள் மூக்கையா தலைமையில் வெள்ளைசாமி, பழனிசாமி.பரசுராம். கண்ணன். சாமிவேல், சிவநேசன்,  பெரியார் உள்ளிட்ட  20க்கும் மேற்பட்டோர் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசனை சந்தித்து முறையிட்டனர். 

இதையடுத்து எம்.எல்.ஏ. மற்றும் வாடிப்பட்டி வேளாண்மைதுறை பரிந்துரையின் பேரில் கலெக்டர் அனீஷ்சேகர் உத்திரவின்பேரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் முன்னிலையில் பொம்மன்பட்டியில் நேற்று முன்தினம் முதல் நெல் கொள்மையம் தொடங்கப்பட்டது. இங்கு நாள் ஒன்றுக்கு 500மூட்டைகள் வீதம் விவவாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யும்பணிகள் தொடங்கியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com