பள்ளி நடைபாதை தளம் திறப்பு

பள்ளி நடைபாதை தளம் திறக்கப்பட்டது.அய்யப்பன் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.
பள்ளி நடைபாதை தளம் திறப்பு
Published on

உசிலம்பட்டி

உசிலம்பட்டி-மதுரை ரோட்டில் உள்ள டிஇஎல்சி நடுநிலைப் பள்ளியின் நுழைவு வாயில் முதல் வகுப்பறை வரை தனது சொந்த செலவில் ரூ.10 லட்சம் மதிப்பிலான நடைபாதைத்தளம் பி. அய்யப்பன் எம்.எல்.ஏ. அமைத்துக்கொடுத்தார். அதன் திறப்பு விழாவில் பள்ளி நிர்வாகி ப. கேசவன் தலைமையில் தலைமையாசிரியர் ஆக்னஸ் வரவேற்றார். சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் எம்.எல்.ஏ.கலந்து கொண்டு திறந்து வைத்தார்.

வார்டு உறுப்பினர் சந்திரன் அமைப்புசாரா ஓட்டுனர் அணி எஸ்.பி.பிரபு நகர செயலாளர் சசிகுமார் ஒன்றிய செயலாளர் ஜான்சன் செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் அழகுமாரி தொகுதி செயலாளர் ராஜா வில்லாணி பாண்டி மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் பிரபாகரன் நன்றி கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com