நண்பரை பார்க்க சென்றவர் மாயம்

நண்பரை பார்க்க சென்றவர் மாயமானார். இவர்களுக்கு 23 வயதில் மகளும், 20 வயதில் மகனும் உள்ளனர்.
 முத்துகிருஷ்ணன்
 முத்துகிருஷ்ணன்
Published on

மதுரை

மதுரை பி.பி.சாவடி பல்லவன் நகர் 6-வது தெருவை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (வயது 48). இவரது மனைவி மீனாட்சி (42). இவர்களுக்கு 23 வயதில் மகளும், 20 வயதில் மகனும் உள்ளனர். கடந்த மாதம் 5-ந் தேதி முத்துகிருஷ்ணன், தஞ்சாவூர் பூண்டி சர்ச் பகுதியில் உள்ள தனது நண்பர் ஜோசப் சகாயராஜை பார்க்கப்போகிறேன் என்று கூறிவிட்டு சென்றார். 2 நாள் கழித்து அவர், மனைவியிடம் பேசினார்.

அதன்பிறகு முத்துகிருஷ்ணனின் செல்போன் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டுவிட்டது. அவரது நண்பரின் செல்போனும் அனைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து மனைவி மீனாட்சி கொடுத்த புகாரின் பேரில் கரிமேடு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் தண்டீஸ்வரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com