ஆம்னி பஸ் மோதிய விபத்தில் மேலும் ஒருவர் சாவு

திருமங்கலம் 4 வழிச்சாலையில் ஆம்னி பஸ் மோதிய விபத்தில் மேலும் ஒருவர் பலியானார். இவர் மதுரை சமயநல்லூரை சேர்ந்தவர் சங்கர். மதுரை அரசு மருத்துவமனையில் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.
ஆம்னி பஸ் மோதிய விபத்தில் மேலும் ஒருவர் சாவு
Published on

திருமங்கலம்

மதுரை சமயநல்லூரை சேர்ந்தவர் சங்கர். இவர் மதுரை அரசு மருத்துவமனையில் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் சங்கர் கடந்த 9-ந் தேதி திருமங்கலம் அருகே உள்ள மேலஉரப்பனூரில் உள்ள நண்பர் சிவகுமார் வீட்டிற்கு சென்றார். பின்னர் ஒரே மோட்டார் சைக்கிளில் சங்கர், சிவகுமார் இவர்களது நண்பர் சிவன்ராஜ்(வயது24) ஆகியோர் செங்குளத்தில் இருந்து திருமங்கலம் செல்லவதற்காக மதுரை-விருதுநகர் நான்கு வழிச்சாலையை கடக்க முயன்றனர்.

அப்போது எதிர்பாராத விதமாக அந்த வழியாக வந்த ஆம்னி பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த சங்கர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சிவகுமார் மற்றும் சிவன்ராஜ் ஆகியோர் சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த 10-ந் தேதி சிகிச்சை பலனளிக்காமல் சிவகுமார் இறந்தார். இதை ெதாடர்ந்து சிகிச்சை பெற்று வந்த சிவன்ராஜூ நேற்று (13-ந் தேதி) சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது.

இந்த விபத்து குறித்து திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com