மோட்டார் சைக்கிள் விபத்தில் மகன் கண் முன்பு தாய் பலி

திருப்பரங்குன்றம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் மகன் கண் முன்பு தாய் பலியானார். இந்த சம்பவம் குறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மோட்டார் சைக்கிள் விபத்தில் மகன் கண் முன்பு தாய் பலி
Published on

மதுரை

மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள நிலையூர் ஓம்சக்திநகரை சேர்ந்தவர் விஜயா (வயது 70). இவரது மகன் குமார் (40). சம்பவத்தன்று இவர் தனது தாயுடன் மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டார். நிலையூர் சந்திப்பில் சென்றபோது மோட்டார் சைக்கிள் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி விபத்துக்குள்ளானது.

இதில் விஜயா, அவரது மகன் குமார் ஆகியோர் கீழே விழுந்தனர். தலையில் காயமடைந்த விஜயா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தன் கண் முன்பே தாய் இறந்ததை பார்த்து குமார் கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது.

விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விஜயாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com