பால்குட ஊர்வலம்

நொண்டி சுவாமி கோவில் கும்பாபிஷேகம் வருகிற 4-ந் தேதி நடைபெற உள்ளது. காஞ்சிவனம் சுவாமி கோவிலில் இருந்து பால்குடம் எடுத்து வந்தனர்.
பால்குட ஊர்வலம்
Published on

மேலூர்

மதுரை மாவட்டம் மேலூர் நொண்டி கோவில்பட்டியில் அமைந்துள்ள நொண்டி கோவில் சுவாமி கோவில் கும்பாபிஷேகம் வருகிற 4-ந்தேதி நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு இன்று நொண்டி கோவில்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மக்கள் இன்று காலை மேலூர் பஸ் நிலையம் எதிரே உள்ள ஸ்ரீ காஞ்சிவனம் சுவாமி கோவிலில் இருந்து பால்குடம் எடுத்து கிராம அம்பலகர்கள் முன்னிலையில் ஊர்வமாய் சேனல் ரோடு, ஆற்றுக்கால் வழியாக கோவிலை சென்றடைந்தனர். அங்கு சாமிக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது. இதனை ஏராளமான பொதுமக்கள் தரிசனம் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com