வீரமாகாளியம்மன் கோவில் வருடாபிஷேகம்

மேலூர் வீரமாகாளியம்மன் கோவிலில் வருடாபிஷேகம் நடந்தது.மேலூர் வீரமாகாளியம்மன் கோவிலில் வருடாபிஷேகம் நடந்தது.
வீரமாகாளியம்மன் கோவில் வருடாபிஷேகம்
Published on

மேலூர்

மதுரை மாவட்டம் மேலூர் வெங்கடேஸ்வரா நகரில் வீரமாகாளி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 12-வது வருடாபிஷேகம் இன்று நடந்தது. இதையொட்டி மேலூர் சிவன் கோவில் சிவாச்சாரியார்கள் ராஜா, தட்சிணாமூர்த்தி ஆகியோர் தலைமையில் கணபதி ஹோமம் நடந்தது.

கோவில் முன்பு யாகம் வளர்க்கப்பட்டு புனித நீரால் விநாயகர், முருகன், வீரமாகாளியம்மன் ஆகியோருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர். வெங்கடேஸ்வரா நகர் மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com