மேலூர்: பயணிகள் நிழற்குடையை திறந்து வைத்த எம்.எல்.ஏ.

மேலூர் அருகே பயணிகள் நிழற்குடை பெரியபுள்ளான் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் மேலூர்-சிவகங்கை மெயின்ரோட்டில் இந்த பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டது.
மேலூர்: பயணிகள் நிழற்குடையை திறந்து வைத்த  எம்.எல்.ஏ.
Published on

மேலூர்

மேலூர் ஊராட்சி ஒன்றியம் வண்ணாம்பாறைபட்டி ஊராட்சியில் பொது நிதியின் கீழ் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் மேலூர்-சிவகங்கை மெயின்ரோட்டில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டது. இதை பெரிய புள்ளான் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. தமிழரசன் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.

இதில் மேலூர் யூனியன் தலைவர் பொன்னுசாமி, வண்ணாம்பாறைபட்டி ஊராட்சி மன்ற தலைவர் பூமாரி மகாராஜன், துணைத் தலைவர் சின்ன கருப்பு, மேலூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலசந்தர், ஜெயபாலன், யூனியன் பொறியாளர்கள் மணிமாறன், நெடுஞ்செழியன், உறங்கான்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன், கூட்டுறவு சங்க தலைவர்கள் வெள்ளலூர் இளங்கண்ணன், கோட்டநத்தம்பட்டி கந்தப்பன், கிடாரிபட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com