

மதுரை
மதுரை அரசு மருத்துவமனை சார்பில் உடல் உறுப்பு தானத்தை வலியுறுத்தி பேரணி மற்றும் மனித சங்கிலி நடத்தப்பட்டது. இதில் மருத்துவ கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
அரசு ஆஸ்பத்திரியில் இருந்து தொடங்கிய பேரணி பனகல் சாலை, திருவள்ளுவர் சிலை சந்திப்பு, கலெக்டர் அலுவலக சாலை வழியாக மருத்துவ கல்லூரிக்கு வந்தடைந்தது.
இதில் அரசு மருத்துவமனை டீன் ரத்தினவேல், மருத்துவ கண்காணிப்பாளர் விஜயராகவன், துணை கண்காணிப்பாளர் தர்மராஜ், நிலைய மருத்துவ அதிகாரிகள் ஸ்ரீலதா, ரவீந்திரன், மருத்துவ கல்லூரி துணை முதல்வர் தனலட்சுமி, ஒருங்கிணைப்பாளர் ஜெகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.