கொத்தனார் தற்கொலை

கொத்தனார் தற்கொலை செய்து கொண்டார். பழனிக்குமார் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கொத்தனார் தற்கொலை
Published on

மதுரை

மதுரை தத்தனேரி, பெரியசாமி நகரை சேர்ந்தவர் பழனிக்குமார் (வயது 36) கொத்தனார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. குடிப்பழக்கம் இருந்து வந்தது. இதன் காரணமாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பழனிக்குமாரின் தாய் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மரணம் அடைந்து விட்டார். இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த பழனிக்குமார் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது தொடர்பாக செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பழனிக்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com