தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளராக மணிமாறன் மீண்டும் ேதர்வு

மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளராக மீண்டும் தேர்வான மணிமாறனுக்கு நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர். தி.மு.க. 15வது பொதுத் தேர்தல் முடிவின்படி மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளராக சேடபட்டி மு.மணிமாறன் போட்டியின்றி மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.
மாவட்ட செயலாளர் மணிமாறனுக்கு நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
மாவட்ட செயலாளர் மணிமாறனுக்கு நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
Published on

திருமங்கலம்

தி.மு.க. 15வது பொதுத் தேர்தல் முடிவின்படி மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளராக சேடபட்டி மு.மணிமாறன் போட்டியின்றி மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.

இதனை தொடர்ந்து 2-வது முறையாக தேர்வான மணிமாறனுக்கு கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும், உள்ளாட்சி பிரதிநிதிகளும், பிரமுகர்களும் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். திருமங்கலம் நகரிலுள்ள மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க அலுவலகத்திற்கு நேற்று காலை வருகை தந்த மாவட்டச் செயலாளர் சேடபட்டி மணிமாறனுக்கு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மேளதாளம் முழங்க பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இதில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் முத்துராம லிங்கம், லதா அதியமான், மதுரை மண்டல தி.மு.க.

தகவல் தொழில்நுட்ப அணி மண்டல பொறுப்பாளர் பாசபிரபு, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மதன்குமார், திருமங்கலம் நகர செயலாளர் ஸ்ரீதர், நகர் மன்ற தலைவர் ரம்யா முத்துக்குமார், துணை தலைவர் ஆதவன் அதியமான், மாவட்ட கவுன்சிலர் செல்வமணி செல்லச்சாமி, முன்னாள் கவுன்சிலர் முத்துக்குமார் மற்றும் திரளானோர் கலந்து கொண்டனர்.

தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளராக பாசபிரபு நியமிக்கப்பட்டுள்ளார். விரகனூர் சேர்ந்த பாசப்பிரபு தி.மு.க. மதுரை தெற்கு மாவட்ட தகவல் ொழில்நுட்ப அணி அமைப்பாளராக செயல்பட்டு வந்தார். தற்போது இவரை மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப அணியின் மண்டல பொறுப்பாளராக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒப்புதலுடன் தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் ராஜா நியமித்துள்ளார்.

மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறனை, பாசபிரபு சந்தித்து வாழ்த்து பெற்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com