வியாபாரியை தாக்கியவர் கைது

மதுரையில் வியாபாரியை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.
கைது
கைது
Published on

மதுரை

மதுரை முத்துப்பட்டி வீரமுடையான் கோவில் தெருவைச் சேர்ந்த நாகேந்திரன் மனைவி பஞ்சு (30). இவர் அந்த பகுதியில் கட்டிட வேலைக்கான பொருட்களை வாடகை வாடகைக்கு விட்டு பிழைப்பு நடத்தி வருகிறார். 

இவரிடம் கீழமுத்துப்பட்டி காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த மதிவாணன் மகன் கொத்தனார் சபரிநாதன் (வயது 24) என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கட்டிடப் பொருட்களை வாடகைக்கு எடுத்து உள்ளார்.

 அவர் கட்டிட உபயோகப் பொருட்களை திருப்பி கொடுக்கவில்லை என்று தெரிகிறது. பஞ்சு தட்டி கேட்டார். 

இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சபரிநாத் சரமாரியாக தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த பஞ்சு சுப்பிரமணியபுரம் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சபரிநாத்தை கைது செய்தனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com