மதுரை மாநகராட்சி புகார் எண்கள் தொடக்கம்

மதுரை மாநகராட்சி புகார் எண்கள் இன்று முதல் செயல்பட தொடங்கியது. இதன் வாயிலாக பொதுமக்கள் ஆன்லைன் மூலம் புகாரின் நிலையை அறிந்து கொள்ளலாம்.
மதுரை மாநகராட்சி புகார் எண்கள் தொடக்கம்
Published on

மதுரை

மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் வசிக்கும் பொதுமக்கள், குறைகளை தெரிவிக்க ஏதுவாக, 24 மணி நேர கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இதனை பொதுமக்கள் தொடர்பு கொள்வதற்காக, புதிய அலைபேசி மற்றும் வாட்ஸ்-அப் எண் (7871661787) அறிவிக்கப்பட்டு இருந்தது. அது இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்து உள்ளது. எனவே பொதுமக்கள் தொலைபேசி மற்றும் மதுரை மாநகராட்சியின் www.mducorpicts.com இணையதளம் மூலம் புகார் தெரிவிக்கலாம். அப்போது சம்பந்தப்பட்டவருக்கு புகார் ஒப்புகை எண், குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படும். இதன் வாயிலாக பொதுமக்கள் ஆன்லைன் மூலம் புகாரின் நிலையை அறிந்து கொள்ளலாம். இந்த தகவலை மதுரை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com