மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.13 கோடியே 8 லட்சம் கடன் உதவி வழங்கப்பட்டது.100-க்கும் அதிகமான மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி
Published on

உசிலம்பட்டி

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா செல்லம்பட்டியில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் 10-க்கும் மேற்பட்ட வங்கிகளை ஒருங்கிணைத்து அதன் மூலம் வட்டார அளவிலான 100-க்கும் அதிகமான மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

இந்த குழுக்களுக்கு ரூ.13 கோடியே 8 லட்சம் மதிப்பிலான கடன் உதவிகளை மதுரை மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் காளிதாசன் வழங்கினார். இதில் செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமப்புற பகுதிகளில் உள்ள சுய உதவி குழு பெண்கள் திரளாக கலந்து கொண்டனர்.

உசிலம்பட்டி பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட வங்கிகளின் கிளை மேலாளர்கள் கலந்து கொண்டு காசோலைகளை மகளிர் குழுவினருக்கு வழங்கினர். இந்த நிகழ்வில் மகளிர் குழுக்கள் சார்பில் தயாரிக்கப்பட்ட கைவினைப் பொருட்கள், இயற்கை உணவுகளை காட்சிப்படுத்தி இருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com