பூட்டிய வீட்டில் நகை-பணம் கொள்ளை

பூட்டிய வீட்டில் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பூட்டிய வீட்டில் நகை-பணம் கொள்ளை
Published on

மேலூர்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளது நாவினிப்பட்டி. இந்த ஊரைச் சேர்ந்தவர் பிவி ஜான்.இவரது கணவர் இறந்துவிட்டார். இவர் களுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். மகள் திருமணம் ஆகி அமெரிக்கா வில் வசித்து வருகிறார். மகன் சென்னையில் வேலை பார்த்து அங்கு குடும்பத்தோடு வசித்து வருகின்றனர்.

பீவிஜான் மட்டும் இங்கு தனியாக வசித்து வருகிறார். சம்பவத்தன்று இரவு இவர் அருகில் உள்ள தனது தங்கை வீட்டிற்கு தூங்க சென்று விட்டார். இதனை நோட்டுமிக்க மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 4 பவுன் நகை, ரொக்கம் ரூபாய் 30 ஆயிரம், வீட்டில் இருந்த டிவி மற்றும் விலை உயர்ந்த பொருட் களை திருடி சென்றனர்.

இது குறித்து மேலூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்த ஜோதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com