ஜல்லிக்கட்டு காளை சாவு

இறந்த ஜல்லிக்கட்டு காளைக்கு கிராம மக்கள் அஞ்சலி செலுத்தினர். பல்வேறு மஞ்சுவிரட்டு போட்டிகளில் பங்கேற்று ஏராளமான பரிசுகளை வென்றுள்ளது.
இறந்த ஜல்லிக்கட்டு காளை.
இறந்த ஜல்லிக்கட்டு காளை.
Published on

மேலூர்

மேலூர் அருகே உள்ளது வஞ்சி நகரம். இங்குள்ள கருப்பணசாமி கோவிலுக்கு பட்டத்து கோவில் காளை உள்ளது.

இந்த காளை அலங்காநல்லூர், அவனியா புரம், சிராவயல் உள்பட பல்வேறு மஞ்சுவிரட்டு போட்டிகளில் பங்கேற்று ஏராளமான பரிசுகளை வென்றுள்ளது. கடந்த சில நாட்களாக உடல்நலமின்றி இருந்த காளை இன்று காலை இறந்தது.

இதையடுத்து அந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் இறந்த காளைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அதனை அடக்கம் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com