ஊரணி சீரமைக்கும் பணி

மேலூர் நகராட்சியில் தெப்பக்குளம் ஊரணி சீரமைக்கும் பணி தொடங்கியது
ஊரணி சீரமைக்கும் பணி.
ஊரணி சீரமைக்கும் பணி.
Published on

மேலூர் நகராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நகராட்சி பகுதிகளில் உள்ள 10  ஊரணிகளை சுத்தப்படுத்தும் பணி நடைபெற உள்ளது. முதல் கட்டமாக  நீண்டநாட்களாக பராமரிப்பின்றி கிடக்கும் மண்கட்டி தெப்பகுளம் மற்றும் மலம்பட்டி ஊரணி ஆகியவற்றை தூர்வாரும்பணி தொடங்கியது. மேலூர் நகராட்சி சேர்மன் முகமது யாசின் பூமி பூஜை செய்து தொடங்கி  வைத்தார். 

மண்கட்டி தெப்பக்குளத்தை ரூ.81  லட்சத்து 31 ஆயிரம் மதிப்பீட்டிலும், மலம்பட்டி ஊரணி ரூ.87 லட்சத்து 47 ஆயிரம் மதிப்பீட்டிலும் தூர்வாரப்படுகிறது. இந்த ஊரணிகளின் பக்கவாட்டில் கல் பதித்து, நடைமேடை அமைத்து அதில் பேவர் பிளாக் பதிக்கப்படுகிறது. 

 சுற்றிலும் மரக்கன்றுகள் நட்டும், பாதுகாவலர் அறை அமைத்தும், சிறுவர் விளையாட்டு பூங்கா அமைத்தும், கண்காணிப்பு கேமராவும் பொருத்தப்பட உள்ளது. 

பூமிபூஜை நிகழ்ச்சியில் நகராட்சி கமிஷனர் ஆறுமுகம், என்ஜினீயர் பட்டுராஜன், துணை சேர்மன் இளஞ்செழியன், கவுன்சிலர்கள் கமல் மைதீன், நதியா மீனாட்சிசுந்தரம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com