சாத்தியார் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

சாத்தியார் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் இப்பகுதி பாசன வசதி பெறும் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சாத்தியார் அணைக்கு அதிகளவில்  தண்ணீர் வருவதை படத்தில் காணலாம்.
சாத்தியார் அணைக்கு அதிகளவில் தண்ணீர் வருவதை படத்தில் காணலாம்.
Published on

அலங்காநல்லூர்

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள சாத்தியார் அணை 29 அடி கொள்ளளவு கொண்டதாகும். இந்த அணை கடந்த ஆண்டு பெய்த பருவமழை காரணமாக ஒரே ஆண்டில் 2 முறை முழு கொள்ளளவை எட்டியது. இதன் காரணமாக இப்பகுதி பாசன வசதிக்காக சாத்தியார் அணையிலிருந்து 11 கிராம கண்மாய் பாசன வசதிக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இந்நிலையில் தற்போது பெய்து வரும் கனமழை காரணமாகவும் சாத்தியார் அணைக்கு நீர்ப்பிடிப்பு பகுதியில் இருந்து சுமார் 260 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இன்னும் ஓரிரு நாட்கள் தொடர் கனமழை பெய்தால் சாத்தியார் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து முழு கொள்ளளவை எட்டி மீண்டும் மறுகால் பாயும் வாய்ப்புள்ளது.

இதனால் இப்பகுதி பாசன வசதி பெறும் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com