தமிழகத்தில், மீண்டும் முதல்வராக எடப்பாடி பழனிசாமி வருவார்

தி.மு.க.வை வீட்டுக்கு அனுப்பிவிட்டு தமிழகத்தில், மீண்டும் முதல்வராக எடப்பாடி பழனிசாமி வருவார். ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேசினார்.
தமிழகத்தில், மீண்டும் முதல்வராக எடப்பாடி பழனிசாமி வருவார்
Published on

மதுரை

மதுரையில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. எழுச்சி மாநாடு சிறப்பாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து பல லட்சம் தொண்டர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.

மாநாட்டின் இறுதியில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செய லாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. நன்றி உரையாற்றினார்.

பின்னர் அவர் பேசியதாவது:-

கடந்த சட்டமன்ற தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றி தி.மு.க. ஆட்சிக்கு வந்துவிட்டது. தி.மு.க. ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களும் நிம்மதி இன்றி தவித்து வருகிறார்கள். நாளுக்கு நாள் விலையேற்றம், வரி சுமை ஆகியவற்றின் காரண மாக தி.மு.க. அரசு மக்களை வாட்டி வதைக்கிறது. இந்த ஆட்சியின் கொடூர பிடியிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ள கழகத்தின் பொதுச் செய லாளர் எடப்பாடி பழனி சாமியை தான் மக்கள் சாமியாக நினைக்கிறார்கள். அதற்கு சாட்சியாக தான் இந்த மாநாட்டில் அலை கடலென மக்கள் வெள்ளம் திரண்டு வந்துள்ளது.

எனவே தமிழகத்தில் நடைபெறும் மக்கள் விரோத தி.மு.க. ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் நாள் நெருங்கி விட்டது. தி.மு.க.வை வீட்டுக்கு அனுப்பிவிட்டு அ.தி.மு.க. ஆட்சியை மீண்டும் ஏற்படுத்தி நமது எடப்பாடி யாரை தமிழகத்தின் அடுத்த முதல்வராக ஆக்க தமிழக மக்கள் தயாராகிவிட்டனர்.

எனவே இந்த வரலாற்று சிறப்புமிக்க சாதனை மாநாட்டில் கலந்து கொண்ட உங்கள் அனை வருக்கும் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com