மதுரை-திருமங்கலம் இடையே அதிவேக ரெயில் சோதனை ஓட்டம்

மதுரை-திருமங்கலம் இடையே அதிவேக ரெயில் சோதனை ஓட்டம் நடந்தது. பொதுமக்கள் ெரயில் பாதையை கடக்கவோ அல்லது நெருங்கவோ முயற்சிக்க வேண்டாம் என மதுரை ரெயில்வே கோட்டம் கேட்டுக்கொண்டுள்ளது.
மதுரை-திருமங்கலம் இடையே அதிவேக ரெயில் சோதனை ஓட்டம்
Published on

மதுரை

தென் தமிழகத்தின் முக்கிய நகரமான மது ரைக்கும் கன்னி யாகு மரிக்கும் இடையே இரட்டை அகல ரெயில் பாதை பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக மதுரை- திருமங்கலம் இடையே உள்ள 17 கிலோமீட்டர் தொலைவுக்கு 2-வது அகல ரெயில் பாதை அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த பணிகள் தற்போது முடிவடைந்துள்ளன. மதுரை-திருமங்கலம் இடையே புதிதாக அமைக்கப்பட்டுள்ள அகல ரெயில்பாதையின் உறுதித் தன்மையை ஆய்வுசெய்ய நாளை(3-ந்தேதி) அதிவேக ரெயில் சோதனை ஓட்டம் நடத்துவது என்று அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

இதற்காக தென்னக ரெயில்வே கட்டுமான பிரிவு தலைமை செயல் அதிகாரி வி.கே.குப்தா தலைமையிலான குழுவினர் மதுரை வருகின்றனர். நாளை மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை மதுரை- திருமங்கலம் இடையே அதிவேக ரெயில் சோதனை ஓட்டம் நடைபெறுகிறது. இதனை அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர்.

சோதனை ஓட்டம் நடைபெறும் நேரத்தில் தண்டவாளத்தை ஒட்டி குடியிருக்கும் பொதுமக்கள் ெரயில் பாதையை கடக்கவோ அல்லது நெருங்கவோ முயற்சிக்க வேண்டாம் என மதுரை ரெயில்வே கோட்டம் கேட்டுக்கொண்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com