புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை

திருமங்கலத்தில் புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கணவன்-மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டுள்ளது
புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை
Published on

திருமங்கலம்

மதுரை மாவட்டம் திருமங்கலம் குளத்துக்காடு பகுதியை சேர்ந்த கணேசன் என்பவரின் மகன் சுகன் (வயது31). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி சித்ரா திருமங்கலம் நகைக்கடையில் வேலை பார்க்கிறார். இருவருக்கும் திருமணமாகி 8 மாதம் ஆகிறது.

இந்நிலையில் இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வீட்டின் படுக்கை அறையில் சுகன் தூக்கில் தொங்கினார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

அவரை பரிசோதித்த மருத்துவர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.இந்த சம்பவம் குறித்து சுகனின் தாய் முருகேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com