அரசு பஸ் மோதி தொழிலாளி பலி

திருமங்கலம் அருகே அரசு பஸ் மோதி தொழிலாளி பலியானார்.
விபத்துக்கு காரணமான பஸ்சையும், பலியான தொழிலாளி யும் பிணமாக கிடப்பதையும் படத்தில் காணலாம்.
விபத்துக்கு காரணமான பஸ்சையும், பலியான தொழிலாளி யும் பிணமாக கிடப்பதையும் படத்தில் காணலாம்.
Published on

திருமங்கலம்

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள  வலையங்குளத்தைச் சேர்ந்தவர் மகாலிங்கம் (வயது 55), கட்டிட தொழிலாளி. 

இவர் இன்று காலை இருசக்கர வாகனத்தில் வீட்டில் இருந்து புறப்பட்டார். நேசநேரி விலக்குப்பகுதியில் நான்குவழிச் சாலையை அவர் கடக்க முயன்றார். அப்போது மதுரையில் இருந்து கோவில்பட்டி சென்ற அரசு பஸ் அங்கு வந்தது. 

அந்த பஸ் எதிர்பாராத விதமாக மகாலிங்கம் சென்ற  இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டார். பலத்த காயம் அடைந்த மகாலிங்கம் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார்.  இது குறித்த தகவல் கிடைத்ததும் திருமங் கலம் தாலுகா போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பலியான மகாலிங்கம் உடல் பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com