கணவருடன் சென்ற பெண்ணிடம் தங்க செயின் பறிப்பு

கணவருடன் சென்ற பெண்ணிடம் தங்க செயின் பறிக்கப்பட்டது. சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து செயின் பறிப்பில் ஈடுபட்ட இருவரை தேடி வருகின்றனர்.
கணவருடன் சென்ற பெண்ணிடம் தங்க செயின் பறிப்பு
Published on

அலங்காநல்லூர்

மதுரை மாவட்டம் சக்கிமங்கலம் முனியாண்டி கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயபிரபு (வயது 36). இவர் அதே பகுதியில் கம்யூட்டர் சென்டர் நடத்தி வருகிறார். இவரது மனைவி பொன்னுத் தாயி (வயது33).

இவர்கள் இவரும் இருசக்கர வாகனத்தில் நேற்று மதியம் உறவினர் இல்ல திருமண விழா விற்காக ஊமச்சிகுளம் வழி யாக அலங்காநல்லூர் அரு கே உள்ள கல்லணை திருமண மண்டபத்திற்கு வந்தனர்.

அப்போது இவர்களை பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் முகமூடி அணிந்து வந்த 25 வயது மதிக்கத்தக்க 2 பேர் வாவிடமருதூர் கண்மாய் கரை அருகே வந்தபோது ஜெயபிரபுவிடம் முகவரி கேட்பது போல் பேசினர். அப்போது மர்ம நபர்கள் திடீரென பின்னால் அமர்ந்தி ருந்த பொன்னுத்தா யி கழுத்தில் ணிந்திருந்த தங்க செயினை பறிக்க முயன்றனர். உடனே சுதாரித்துக்கொண்ட அவர் செயினை இறுக பிடிக்க தங்க சங்கிலியின் ஒரு பகுதி மட்டும் திருடர்கள் கையில் சிக்கி கொண்டது.

உடனே கண் இமைக்கும் நேரத்தில் முகமூடி அணிந்த இருவரும் டூவிலரில் தப்பிச்சென்று விட்டனர்.

இதுகுறித்து பொன்னுத் தாயி அளித்த புகாரின் பேரில் அலங்கா நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து செயின் பறிப்பில் ஈடுபட்ட இருவரை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com