இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
Published on

மதுரை

மதுரை வண்டியூர் சிவசக்தி நகர் டி.பி.எஸ்.நகரை சேர்ந்தவர் விக்னேஷ்வரன். இவரது மனைவி சுபா (37). இவர் அரசு வேலையில் சேர்வதற்காக கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு போட்டி தேர்வுகளை எழுதி வந்தார்.

ஆனால் அவருக்கு அரசுக்கு வேலை கிடைக்கவில்லை. இதனால் விரக்தியடைந்த சுபா சம்பவத்தன்று வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தெப்பக்குளம் செல்வ விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் சசிகுமார்(45). இவருக்கு நிரந்தர வேலை கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இதில் விரக்தியடைந்த அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

அவரது மனைவி சாரதா கொடுத்த புகாரின் பேரில் தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com