வியாபாரியிடம் ரூ.25 லட்சம் மோசடி

வியாபாரியிடம் ரூ.25 லட்சம் மோசடி செய்த பெண்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். திடீர்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணன் மற்றும் 5 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது.
வியாபாரியிடம் ரூ.25 லட்சம் மோசடி
Published on

மதுரை

மதுரை மேலமாசி வீதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 57). அந்த பகுதியில் கார்மெண்ட்ஸ் கடை நடத்தி வரும் இவர், திடீர் நகர் போலீசில் புகார் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

சங்கரநாராயணன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் கார்மெண்ட்ஸ் கடை நடத்தி வருகி றேன். இதற்காக சங்கர நாராயணனின் தந்தை நாகலிங்கத்திடம் ரூ.25 லட்சம் கொடுத்தேன். இந்த நிலையில் நாகலிங்கம் இறந்துவிட்டார்.

நான் கொடுத்த ரூ.25 லட்சத்தை சங்கரநாராயணன் திருப்பி தராமல், கடையை காலி பண்ண சொல்லி நெருக்கடி கொடுத்து வருகிறார். இதற்கு சங்கரநாராயணனின் தாய், மனைவி மற்றும் உறவினர் உள்பட 6 பேர் உடந்தையாக உள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் திடீர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கரநாராயணன், அவரது மனைவி, தாய் மற்றும் உறவினர் உள்பட சிலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதே வழக்கில் சங்கரநாராயணன் கொடுத்த புகாரின் அடிப்ப டையில், திடீர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணன் மற்றும் 5 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com