முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் விபத்தில் பலி

மேலூர் அருகே முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் விபத்தில் பலியானார். அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.
முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்  விபத்தில் பலி
Published on

மேலூர்

மேலூர் அருகே உள்ள அ.வளையப்பட்டியை சேர்ந்தவர் தர்மராஜ் (வயது51). அ.தி.மு.க. பிரமுகரான இவர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவர்.

இன்று காலை கீரைக் கட்டுகளை விற்பதற்காக தனது இருசக்கர வாகனத்தில் மாட்டுத்தாவணி மா்ாக்கெட்டிற்கு சென்றார். பின்பு அங்கிருந்து வீட்டிற்கு திரும்பினார். அழகர் கோவில் அருகே உள்ள அப்பன் திருப்பதி பகுதியில் வந்து கொண்டிருந்த அவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.

இதில் ரோட்டோரம் இருந்த ஓடைக்குள் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். அந்த வழியாக சென்றவர்கள் வெகு நேரத்திற்கு பின்னே தர்மராஜ் இறந்து கிடப்பதை பார்த்தனர்.

இதுகுறித்து அப்பன் திருப்பதி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தர்மராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்கு பதிந்து தர்மராஜ் மீது மோதிய வாகனம் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com