அரசு பஸ் மோதி பூ வியாபாரி பலி

செக்கானூரணியில் அரசு பஸ் மோதியதில் பூ வியாபாரி பரிதாபமாக இறந்தார். செக்கானூரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரசு பஸ் மோதி பூ வியாபாரி பலி
Published on

திருமங்கலம்

மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகில் ஏ.கொக்குளம் பகுதியை சேர்ந்தவர் சவுந்தர்(வயது40) பூ வியாபாரி.

இவர் இன்று காலை செக்கானூரணியில் உள்ள குளத்தில் குளிப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது உசிலம்பட்டியில் இருந்து மதுரை நோக்கி வந்த அரசு பஸ் சவுந்தர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் செக்கானூரணி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சவுந்தர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com