பெண் சிசு இறந்த நிலையில் கண்டெடுப்பு

மதுரை மாவட்டம் மேலூர் அருகே பிறந்து 3 நாட்களே ஆன பெண் சிசு இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
பெண் சிசு  இறப்பு
பெண் சிசு இறப்பு
Published on

மேலூர்

மேலூர் அருகே உள்ள வினோபா காலனி முட்புதர் பகுதியில் இன்று காலை பெண்சிசு இறந்து கிடந்தது. இதுகுறித்து தகவலறிந்த மேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ், தனிப்படை சப்இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.

இறந்து கிடந்த சிசுவின் உடல் அழுகிய நிலையில் இருந்த-து. தலைப்பகுதியை நாய்கள் கடித்து குதறியிருந்தன. உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

பிறந்த குழந்தையை கொன்று வீசி சென்றவர்கள் யார்? தவறான உறவு முறையால் இந்த செயலை செய்தார்களா? அல்லது பெண் சிசு  என்பதால் கொலை செய்தார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com