இறகு பந்து போட்டி

இறகு பந்து போட்டியில் சரசுவதி நாராயணன் கல்லூரி அணி வெற்றி பெற்றது. மதுரை காமராசர் பல்கலைக்கழக ‘பி’ மண்டல கல்லூரிகளுக்கான இறகு பந்து போட்டி விவேகானந்த கல்லூரியில் நடைபெற்றது.
இறகு பந்து போட்டி
Published on

மதுரை

மதுரை காமராசர் பல்கலைக்கழக 'பி' மண்டல கல்லூரிகளுக்கான இறகு பந்து போட்டி விவேகானந்த கல்லூரியில் நடைபெற்றது. 8 கல்லூரி அணிகள் பங்கு பெற்ற இப்போட்டியில் சரசுவதி நாராயணன் கல்லூரி அணி முதலிடம் பெற்றது.

இதன்மூலம் மதுரை காமராஜர் பல்கலைக்கழக மண்டலங்களுக்கு இடையேயான இறகு போட்டிக்கு சரசுவதி நாராயணன் கல்லூரி அணி தகுதி பெற்றது. வெற்றி பெற்ற மாணவர்களை கல்லூரி முதல்வர் கண்ணன், துணை முதல்வர் மோதிலால், வணிகவியல் துறைத்தலைவர் ஜெயக்கொடி மற்றும் உடற்கல்வி இயக்குநர் யுவராஜ் ஆகியோர் பாராட்டினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com