திருமண ஆசைகாட்டி நர்சுடன் 3மாதம் குடும்பம் நடத்திய மின்வாரிய ஊழியர்

திருமண ஆசைகாட்டி நர்சுடன் 3மாதம் குடும்பம் நடத்திய மின்வாரிய ஊழியர் 3 பேர் மீது வழக்கு.
வழக்கு
வழக்கு
Published on

திருமங்கலம்

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்த 33 வயது பெண் ஒருவர் மதுரை தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். பேரையூர் அருகே அனுப்பபட்டியை சேர்ந்தவர் கருப்பசாமி(வயது27). மின்வாரிய ஊழியராக வேலை பார்த்து வருகிறார். 

கருப்பசாமியும்,  செவிலியராக பணியாற்றி வரும் அந்த பெண்ணும் கடந்த 5 வருடங்களுக்கும் மேலாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு   திருமங்கலத்தில் வீடு வாடகைக்கு எடுத்து கணவன்-மனைவி போல் வாழ்ந்து வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 13-ந் தேதி இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். இதைதொடர்ந்து கருப்பசாமி தாலி  மற்றும் சேலை  வாங்குவதற்காக  வெளியூர் சென்றுள்ளார்.பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. 

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த ெபண்,  கருப்பசாமி வீட்டிற்கு சென்று கேட்டு ள்ளார். அப்போது கருப்பசாமியின் அண்ணன் முனுசாமி(30), தாய் முனியம்மாள்(50) ஆகியோர் அந்த பெண்ணுக்கு கொைல மிரட்டல் விடுத்துள்ளனர்.  

இதுதொடர்பாக அந்த பெண் திருமங்கலம் அனைத்து மகளிர்  போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் விசாரணை நடத்திய போலீசார்,  கருப்பசாமி உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். நர்சு புகார் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com