தொழிலாளர் நலத்துறை சார்பில் கல்வி உதவித்தொகை

தொழிலாளர் நலத்துறை சார்பில் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.மேற்கண்ட தகவலை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) கார்த்தி கேயன் தெரிவித்துள்ளார்.
தொழிலாளர் நலத்துறை சார்பில் கல்வி உதவித்தொகை
Published on

மதுரை

1972-ம் ஆண்டு தமிழ் நாடு தொழிலாளர் நல நிதி சட்டத்தின்படி தொழிற் சாலைகள், கடைகள், மோட்டார் போக்கு வரத்து நிறுவனங்கள், உணவு நிறு வனங்கள் மற்றும் தோட்ட நிறுவ னங்கள் போன்ற அமைப்பு சார்ந்த நிறுவனங் களில் பணிபுரியும் தொழி லாளர் களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தொழிலாளர் மற்றும் நிறு வனத்தின் பங்காக ஒவ் வொரு தொழி லாளிக்கும் ரூ.60 என கணக்கிட்டு நிறு வனத்தில் பணிபுரியும் தொழி லாளர் களின் எண்ணிக்கைக்கேற்ப தொழிலாளர் நல நிதி தொகையினை வாரிய த்திற்கு செலுத்த வேண்டும்.

அதன்படி நடப்பு 2023ம் ஆண்டிற்கான தொழிலாளர் நல நிதியினை 31.01.2024-க்குள் செலுத்த வேண்டும்.

அவ்வாறு தொழிலாளர் நல நிதி செலுத்தும் தொழி லாளர்கள் மற்றும் அவரைச் சார்ந்தவர்களுக்கு வாரி யத்தின் மூலம் பல்வேறு நலத்திட்டங்கள் செயல் படுத்தப்பட்டு வருகிறது.

அதில் ப்ரீ-கே.ஜி முதல் பட்ட மேற்படிப்பு வரை பயிலும் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு ரூ.1000 முதல் ரூ.12000 வரை கல்வி உதவித் தொகை, பாடநூல் வாங்க உதவித்தொகை, 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாண வர்களுக்கு கல்வி ஊக்கத் தொகை ஆகிய திட்டங் களுக்கு தொழி லாளர் களிடமிருந்து விண்ணப் பங்கள் வரவேற்கப்படுகிறது. இவ்வுதவித் தொகையினை பெற தொழிலாளரின் மாத ஊதியம் (Pay+ DA) ரூ.25,000-க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பங்கள் வாரியத்திற்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள் 31.12.2023 ஆகும்.

விண்ணப்பங்களை தமிழ்நாடு தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தில் நேரிலோ அல்லது www.lwb.tn.gov.in என்ற இணைய தளத்திலோ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செய்யப்பட்ட விண்ணப் பங்கள் "செயலாளர், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம், சென்னை-6 என்ற முகவரிக்கு 31.12.2023க்குள் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

மேற்கண்ட தகவலை தொழிலாளர் உதவி ஆணை யர் (அமலாக்கம்) கார்த்தி கேயன் தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com