தி.மு.க. நிர்வாகி தூக்குப்போட்டு தற்கொலை

தி.மு.க. நிர்வாகி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தி.மு.க. நிர்வாகி தூக்குப்போட்டு தற்கொலை
Published on

மதுரை

மதுரை மேல அனுப்பானடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் மணிகண்ட பிரபு (வயது 30). மாணவரணி தி.மு.க. அமைப்பாளராக இருந்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் ஒரு குழந்தை இருந்தனர்.

மணிகண்டபிரபுவின் மனைவிக்கு கடந்த 4 நாட்களுக்கு முன்பு 2-வது குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில் மணிகண்டபிரபு இரவு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக தகவலறிந்த கீரைத்துறை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அவர் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். மணிகண்ட பிரபுவுக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. அது தவிர இவர் அதே பகுதியில் சிறு தொழில் ஒன்றையும் செய்து வந்தார். அதில் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டது. இதனால் வேதனையில் இருந்துள்ளார்.

இதனால் அவர் வாழ்வில் வெறுப்படைந்து தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com