ராஜாஜி பூங்காவில் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் வசூலிக்கக்கூடாது

ராஜாஜி பூங்காவில் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் வசூலிக்கக்கூடாது. என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
ராஜாஜி பூங்காவில் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் வசூலிக்கக்கூடாது
Published on

மதுரை

தமிழ்நாடு தவழும் மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு சார்பில் 30-க்கும் மேற்பட்டோர் இன்று கலெக்டர் அலுவலகம் வந்தனர். அவர்கள் அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

அதில், மதுரை ராஜாஜி சிறுவர் பூங்காவில் மாற்றுத்திறனாளிகள் எவ்வித கட்டணமுமின்றி அனுமதிக்கப்பட்டனர். ஆனால் கடந்த 6 மாதமாக மாற்றுத்திறனாளிகள் கண்டிப்பாக நுழைவு கட்டணம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.

25 ஆண்டுகளுக்கு மேலாக கட்டணமின்றி சென்று வந்ததைபோன்று மீண்டும் மாற்றுத்திறனாளிகள் பூங்காவிற்கு இலவசமாக செல்ல அனுமதி அளிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com