கள்ளத்தொடர்பால் மனைவியை கொன்று கணவரே தூக்கில் தொங்கவிட்டாரா

மதுரை அருகே கள்ளத்தொடர்பால் மனைவியை கொன்று கணவரே தூக்கில் தொங்கவிட்டாரா? என ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.
தூக்கு
தூக்கு
Published on

மதுரை

மதுரை அருகே உள்ள  எஸ்.ஆலங்குளம் முடக்கத்தான் மேட்டு தெருவைச் சேர்ந்த ரவி மனைவி சமுத்திரம் (43). இவர்களது மகள் சந்தியா (22). இவரை ஏ.ராமநாதபுரத்தை சேர்ந்த விஜய் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர். சந்தியாவுக்கு ஆண் குழந்தை பிறந்து 3 மாதம்   ஆகிறது.  விஜய்க்கும், அதே பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனை சந்தியா மற்றும் சமுத்திரம் குடும்பத்தினர் கண்டித்தனர். இருந்த போதிலும் விஜய் திருந்த வில்லை. 

இதுதொடர்பாக விஜய் குடும்பத்துக்கும், சமுத்திரம் குடும்பத்துக்கும்  அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்தது.  சம்பவத்தன்று இரவு சமுத்திரம் மகள் சந்தியாவுக்கு போன் செய்தார். மறுமுனையில் போனை எடுத்த விஜய், “உங்கள் மகள் தூக்கு போட்டு இறந்து விட்டாள்’ என்று கூறி போனை வைத்து விட்டார். 

அதிர்ச்சி அடைந்த சமுத்திரம் குடும்பத்தினர் அலறி அடித்துக்கொண்டு ஏ.ராமநாதபுரத்தில் உள்ள விஜய் வீட்டுக்குச் சென்று பார்த்தனர். அங்கு சந்தியா தூக்கில் பிணமாக தொங்கினார்.

இதுகுறித்து சமுத்திரம் சிந்துபட்டி போலீசில் புகார்  செய்தார். அதில் “என் மருமகன் விஜய்க்கு இன்னொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு உள்ளது.   அவரை சந்தியா  கண்டித்து வந்தார்.   ஆத்திரம் அடைந்த விஜய், அவளைக் கொன்று தூக்கில் மாட்டி இருக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதன் அடிப்படையில் திருமங்கலம்  டி.எஸ்.பி. சிவகுமார் வழக்குப்பதிவு செய்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்கு அனுப்பி வைத்து  விசாரணை நடத்தி வருகின்றார்.  சந்தியாவின் சாவு குறித்து  ஆர்.டி.ஓ விசாரணைக்கும் உத்தர விடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com