வளர்ச்சி திட்ட பணிகள்

ரூ. 10 கோடியில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளை ஆர்.பி. உதயகுமார் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
தடுப்பணையை முதல் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தடுப்பணையை முதல் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Published on

திருமங்கலம்

மதுரை மாவட்டம் திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கட்ராம்பட்டி கிராமத்தில் ரூ. 14 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும் நியாயவிலைக்கடை கட்டிடத்தை முன்னாள் அமைச்சரும்,  திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.பி.உதயகுமார் பார்வை யிட்டு ஆய்வு செய்தார். அங்குள்ள நூலகத்தை பார்வையிட்ட அவர் அங்கன்வாடி மையத்தில் படிக்கும் குழந்தைகளுக்கு சத்துணவு குறித்து கேட்டறிந்தார். 

திருமங்கலம் அருகே சாத்தங்குடியில் ரூ. 2 கோடியே 55 லட்சத்து 56ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட தடுப்பணை மற்றும் ரூ. 78 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும்  புதிய கட்டிடத்தை முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் ஆய்வு செய்தார். இதனைத்தொடர்ந்து ஆலம்பட்டி-சேடபட்டி சாலையில் ரூ. 650 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட உயர் மட்டபாலம் மற்றும் தடுப்பணையை பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

திருமங்கலம் தொகுதி முழுவதும் ரூ. 10 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை அவர் ஆய்வு  செய்தார். இந்த ஆய்வின்போது ஒன்றிய செயலாளர் அன்பழகன், மாவட்ட பேரவை செயலாளர் தமிழழகன், மீனவர் அணி மாவட்ட செயலாளர் சரவண பாண்டி, ஒன்றிய கவுன்சிலர் ஆண்டிச்சாமி, திருமங்கலம் யூனியன் தலைவர் லதா ஜெகன், 2-வது வார்டு கவுன்சிலர் பாண்டி, ஒன்றிய பொருளாளர் சாமிநாதன், அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கர், டி.கல்லுப்பட்டி பேரூராட்சி சேர்மன் சண்முகப்பிரியா பாவடியான், மாண வரணி மாவட்ட இணை ச்செயலாளர் வாகைகுளம் சிவசக்தி, மீனவரணி மாவட்ட இணைச்செயலாளர் விஜி, இளைஞரணி ஜெயமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com