ரெயில்வே தேர்வு குறித்து கோட்ட அலுவலகத்தில் விளக்கம்

ரெயில்வே தேர்வு குறித்து மதுரை கோட்ட அலுவலகத்தில் விளக்கம் கேட்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது-.
ரெயில்வே தேர்வு
ரெயில்வே தேர்வு
Published on

மதுரை

மதுரை கோட்ட ரெயில்வே  அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதா வது:-

ரெயில்வே உதவியாளர் பணிக்கான தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியானது.  இதுகுறித்து விண்ணப்பதாரர்கள் சில குறைபாடுகளை தெரிவித்தனர். அதுபற்றி விசாரிக்க உயர்மட்ட குழுவை ரெயில்வே வாரியம் அமைத்துள்ளது.

இந்த  குழு சமீபத்தில் வெளியான தேர்வு முடிவுகள், விண்ணப்பதாரர் தேர்வுமுறை, 2-ம் கட்ட தேர்வு ஆகியவை குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது. ரெயில்வே தேர் வாணையத்தின் www.iroams.com/outreach  இணைய முகவரியில் விண்ணப்பதாரர்கள் கருத் துக்களை வருகிற 16ந்தேதி வரை பதிவிடலாம்.

இதேபோல் ‘உதவிச்செயலாளர்,  ரெயில்வே பணியாளர் தேர்வாணையம்,  எண்5,   டாக்டர் பி.வி.செரியன் கிரசன்ட் சாலை, எத்திராஜ் கல்லூரி பின்புறம், எழும்பூர், சென்னை-600008 என்ற முகவரிக்கும் கருத்துக்களை அனுப்பலாம்.

விண்ணப்பதாரருக்கு தேர்வு குறித்து  சந்தேகம் இருந்தால், வருகிற  16-ந் தேதி வரை சென்னை, திருச்சி, மதுரை, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம் கோட்ட ரெயில்வே அலுவலகங்களில் உள்ள முதுநிலை கோட்ட ஊழியர் நல அதிகாரிகளை சந்தித்து விளக்கம் பெறலாம்.

நேரடி விளக்கம் பெற வரும்போது விண்ணப்பதாரர் தேர்வு அழைப்பு கடிதம், இருமுறை கொரோனா தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் ஆகியவற்றை கைவசம் வைத்திருக்க வேண்டும்.

-

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com