60 ஆயிரம் பக்தர்களுக்கு அறுசுவை உணவு

மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணத்தையொட்டி 60 ஆயிரம் பக்தர்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்படுகிறது.
உணவு
உணவு
Published on

மதுரை

மதுரை பழமுதிர் சோலை திருவருள் முருகன் பக்த சபை டிரஸ்ட் தலைவர் தண்டீஸ்வரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

பழமுதிர் சோலை திருவருள் முருகன் பக்த சபை டிரஸ்ட் சார்பில் கடந்த 22 ஆண்டுகளாக திருக்கல்யாண விருந்து வழங்கி வருகிறோம். 10 ஆண்டுகள் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் வளாகத்திலும், கடந்த 12 ஆண்டுகளாக மதுரை வடக்கு வெளி வீதியில் உள்ள சேதுபதி மேல்நிலைப்பள்ளியிலும் திருக்கல்யாண விருந்து நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டும் சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் 12 ஆயிரம் சதுரடி பந்தலில் திருக்கல்யாண தினமான வருகிற 14ந்தேதி (வியாழக்கிழமை) காலை 7 மணி முதல் மாலை 3 மணி வரை  சுமார் 60 ஆயிரம் பொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும் திருக்கல்யாண விருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

காலை 7 மணி முதல் மாலை வரையில் திருக்கல்-யாண விருந்து இல்லை என்று சொல்லாமல் வரும் அனைவருக்கும் விருந்து வழங்கப்படும். கல்கண்டு சாதம், சர்க்கரை பொங்கல், வெண்பொங்கல், வடை, சாம்பார் சாதம், தக்காளி சாதம், தயிர் சாதம், உருளை கிழங்கு பொறியல், பச்சடி, ஊறுகாய் தட்டில் இலை வைத்து வழங்கப்படும். 

இந்த விருந்துக்கு தேவை-யான எல்லா காய்கறிகளையும் பரவை மார்க்கெட் மற்றும் மாட்டுத்தாவணி மார்க்கெட் வியாபாரிகள் லாரியில் கொண்டு வந்து கொடுக்கிறார்கள்.

விருந்துக்கு தேவையான அரிசி சபை உறுப்பினர்களும், நண்பர்களும், மீனாட்சி சுந்தரேசுவரர் பக்தர்களும் கொடுக்கிறார்கள். கீழமாசி வீதி வியாபார நண்பர்களும், பக்தர்களும் மளிகைப்-பொருட்கள், எண்ணை, நெய் கொடுக்கிறார்கள். 14ந்தேதி அன்று நடைபெற உள்ள திருக்கல்யாண விருந்துக்கு மளிகைப்பொருட்கள் கொடுக்க விரும்பும் பக்தர்கள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10  மணி முதல் சேதுபதி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கொடுத்து ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும்.

இந்த சமையல் பணிக்கு தேவையான கியாஸ் சிலிண்டர்கள், கியாஸ் அசோசியேசன் சார்பில் அன்பளிப்பாக வழங்குகிறார்கள். இந்த பணியில் சேவை செய்ய விரும்பும் பக்தர்கள் வீட்டில் இருந்து காய்கறிகள் வெட்டும் அரிவாள்மனை அல்லது கத்தியுடன் 13ந்தேதி மாலை 3 மணிக்கு நேரில் வந்து இந்த திருக்கல்யாண விருந்துக்கு தேவையான காய்கறிகளை வெட்டி கொடுத்து உதவி செய்ய வேண்டுகிறோம். 13ந்தேதி (புதன்கிழமை) மாலை வரும் பக்தர்கள் அனைவருக்கும் மாப்பிள்ளை அழைப்பு விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்-ட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com